உள்ளூர் செய்திகள் (District)
நாடியம்மன் கோவில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம்

நாடியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-01-27 10:34 GMT   |   Update On 2022-01-27 10:34 GMT
பட்டுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெரும்விழா மிக கோலாகலமாக நடைபெற்றது.

பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்களின் காக்கும் தெய்வமாகவும் நகரவாசிகள் தங்களின் எல்லை தெய்வமாகவும் ஸ்ரீ நாடியம்மனை போற்றி வணங்கி மகிழ்கின்றனர்.

பட்டுக்கோட்டை என்னும் வீரமாநகரில் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி ஆதியந்தமற்றவள் அற்புத அகோசரி அகிலாலோக சரண்யை அனாதரட்சகி அடியவர்கள் எளியவள், அற்புத மகிமையாள், அமரர்களுக்குத் தலைவி, ராஜராஜ பரமேஸ்வரியாகிய நாடியம்மனின் கோவில் நீண்ட கால வரலாறு கொண்ட தொன்மையானதாகும்.

பல்லுயிருக்கும் குலதெய்வமாய் எழுந்தருளி, காமதேனுவாய் கருணை காக்கும் அம்பாளின்  கோவில் கும்பாபிஷேக  திருவிழா அனுஷ நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய மங்கள வேளையில் தசம  திதியும் கும்ப லெக்கனத்தில் இன்று காலை 8.30 மணிக்கு மேல் 9.20 மணிக்குள் நடைபெற்றது. 

தங்கள் ஊர்காவல் தெய்வமாக நாடியம்பாளை போற்றி வணங்கும் இந்த பகுதி மக்கள் கடந்த வருடங்களில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டும் கொரோனா நோய் தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத காரணத்தினால் இந்த கும்பாபிஷேக விழா நடைபெற்றதால் தங்களின் இன்னல் நீங்கி, நோய் பிணிகள் நீங்கி, இனி வரும் நாட்கள் சுபிட்சமான நாட்களாக மாறும் என்று நம்புகின்றனர்.

நாடியம்மனின் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு கடந்த 23.1.22 
ஞாயிற்றுக்கிழமையன்று அனுக்ஞை , விக்னேஸ்வர பூஜை, யஜமானர் சங்கல், மஹா கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தீபாராதனையுடன் சரியாக காலை 9.10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் வானத்தில் கருடன் வட்டமிட்ட நிலையில் சிறப்பாக நடைபெற்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Similar News