உள்ளூர் செய்திகள் (District)
வேலூர்கொணவட்டம் அரசு பள்ளியை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி இன்று ஆய்வு செய்தார்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு

Published On 2022-02-16 08:50 GMT   |   Update On 2022-02-16 08:50 GMT
வேலூர் மாநகராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடி களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப் படுகிறது. இதுதவிர 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

வேலூரில் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காகிதப்பட்டறை அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி ஆய்வு செய்தார்.

இந்த வாக்குச் சாவடிகளில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. அதனைப் பார்வையிட்டார்.மேலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News