உள்ளூர் செய்திகள் (District)
வெயில்

தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

Published On 2022-04-01 02:51 GMT   |   Update On 2022-04-01 02:51 GMT
தமிழகத்தில் இன்றும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில் தினமும் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்றும் 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. இன்றும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

தமிழகத்தில் முக்கிய இடங்களில் நேற்று பதிவான வெயில் அளவு வருமாறு:-

சென்னை நுங்கம்பாக்கம் - 94.64 டிகிரி (34.8 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம் - 98.6 டிகிரி (37 செல்சியஸ்)

கோவை - 97.16 டிகிரி (36.2 செல்சியஸ்)

குன்னூர் - 77 டிகிரி (25 செல்சியஸ்)

கடலூர் - 96.08 டிகிரி (35.6 செல்சியஸ்)

தர்மபுரி - 98.96 டிகிரி (37.2 செல்சியஸ்)

ஈரோடு - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

கன்னியாகுமரி - 92.84 டிகிரி (33.8 செல்சியஸ்)

கரூர் - 104.9 டிகிரி (40.5 செல்சியஸ்)

கொடைக்கானல் - 68 டிகிரி (20 செல்சியஸ்)

மதுரை - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)

நாகப்பட்டினம் - 93.2 டிகிரி (34 செல்சியஸ்)

நாமக்கல் - 99.5 டிகிரி (37.5 செல்சியஸ்)

சேலம் - 99.68 டிகிரி (37.6 செல்சியஸ்)

தஞ்சாவூர் - 98.6 டிகிரி (37 செல்சியஸ்)

திருச்சி - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)

தொண்டி - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)

தூத்துக்குடி - 89.96 டிகிரி (32.2 செல்சியஸ்)

ஊட்டி - 71.42 டிகிரி (21.9 செல்சியஸ்)

வேலூர் - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)



Tags:    

Similar News