உள்ளூர் செய்திகள்
சங்கரநாராயண சுவாமி கோவிலில் கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்ற காட்சி.

சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Published On 2022-04-07 09:45 GMT   |   Update On 2022-04-07 09:45 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சங்கரன்கோவில்:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங் களில் வீதிஉலா வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது.

இன்று காலை 5.43 மணிக்கு சங்கரலிங்க சாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெற்றது.

கொடியேற்ற நிகழ்ச்சிகளை சிவராஜ்பட்டர் தலைமையிலான பட்டர்கள் செய்தனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந்தேதி (வெள்ளிக் கிழமை) காலை 9 மணிக்கு மேல் நடை பெறுகிறது.

சித்திரைத் திருநாளில் சுவாமி அம்பாள் இரண்டு தேர்களும் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News