உள்ளூர் செய்திகள் (District)
திருநங்கைகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் பேசியபோது எடுத்தபடம்.

திருநங்கைகளுக்கு உதவி போலீஸ் கமிஷ்னர் எச்சரிக்கை

Published On 2022-04-08 09:30 GMT   |   Update On 2022-04-08 09:30 GMT
குற்ற செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உதவி போலீஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.
திருச்சி :

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டலில் திருச்சி மாநகர் பகுதிகளில் சுற்றித்திரியும் அனைத்து திருநங்கைகளையும் வரவழைத்து கண்டோன் மெண்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் உதவி ஆணையர் அஜய்தங்கம் பேசியதாவது: கடந்த சில தினங்களாக திருநங்கைகள் மீது அதிகமான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. 

இரவு நேரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன், டோல்கேட், பால்பண்ணை உள்ளிட்ட இடங்களில் அவ்வழியே செல்லும் போது பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை வழிமறித்து பணத்தை திருடி செல்வதாக புகார்கள் வந்த வண்ணம் ஆக இருக்கிறது.

ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், திருநங்கைகளாக இருந்தாலும் குற்றம் செய்தால் சட்டத்துக்கு முன் அனைவரும் ஒன்றுதான். புற்றீசல்கள் போல் புறப்படும் இந்த செயலை கட்டுப்படுத்த மாநகர போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

அதற்கு திருநங்கைகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு வேறு வேலைக்கு செல்லலாம்.

அரசு சார்பிலும் பல்வேறு உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும். இதையும் மீறி குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 
இவ்வாறு அவர் பேசினார்.

Similar News