உள்ளூர் செய்திகள் (District)
மாணவ-மாணவிகளுக்கு டி.ஐ.ஜி. அறிவுரை.

மாணவ-மாணவிகளுக்கு டி.ஐ.ஜி. அறிவுரை

Published On 2022-04-08 09:46 GMT   |   Update On 2022-04-08 09:46 GMT
செல்போனில் போட்டோக்களை பகிரக்கூடாது என்று மாணவ-மாணவிகளுக்கு டி.ஐ.ஜி. அறிவுரை கூறினார்.
மதுரை

விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மதுரைசரக டி.ஐ.ஜி. பொன்னி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:

மாணவ&-மாணவிகள் நூலகங்களை பயன்படுத்தி வாசிப்பு திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தினசரி செய்திதாள்கள் படித்து பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் ஒரு இலக்கை நிர்ணயித்து அதனை அடைவதற்கான முழு முயற்சிகளை மேற்-கொள்ள வேண்டும். படிப்பில் கவனம் செலுத்துங்கள். தீயவற்றை நினைக்க வேண்டாம். தீயவழியில் செல்லக்கூடாது என்பதை தாரக மந்திரமாக வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.  

உங்கள் புகைப்படங்களை யாராவது கேட்டால் செல்போன்கள் மூலம் பகிரவேண்டாம். அவர்கள் அந்த போட்டோக்களை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உண்டு. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 181, 1098 ஆகிய இலவசஎண்க-ளில் தொடர்புகொண்டு புகார் தரலாம். 

அனைத்து பள்ளிகளிலும் போலீசார் வைத்து உள்ள புகார்பெட்டியில் மாண-விகள் சொல்ல முடியாத பிரச்சினைகள் எங்கு நடந்தாலும், எதுவாக இருந்தாலும் எழுதி போடலாம். போலீசார் மூலம் உடனடியாக நடவ-டிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல்சூப்பிரண்டு சரவணக்குமார், விருதுநகர் டி.எஸ்.பி. அர்ச்-சனா, குழந்தை நல வாரிய தலைவர் கலாராணி, தலைமை ஆசிரியை சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News