உள்ளூர் செய்திகள் (District)
மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன்பெரியசாமி பேசிய போது எடுத்தபடம்.

தூத்துக்குடி மாநகராட்சி முதல் கூட்டம்

Published On 2022-04-08 10:15 GMT   |   Update On 2022-04-08 10:15 GMT
தூத்துக்குடி மாநகராட்சியின் முதல் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி:
 
தூத்துக்குடியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று மேயர், துணை மேயர் மற்றும் மண்டல தலைவர்கள் பல்வேறு பணிக்குழு தலைவர்கள் பொறுப்பேற்று உள்ளனர்.

இந்நிலையில் மாநகராட்சியின் முதல் கூட்டம் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக மாநகராட்சி அலுவலகததில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    
கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, வ.உ.சி. சந்தையில் உள்ள கடைகளுக்கு மாத வாடகை நிர்ணயம், போல்டன்-புரத்தில் புதிய தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வது உட்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்-பட்டது.

கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன்சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், காந்திமதி, ராமசந்திரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, கவுன்-சிலர்கள் கீதாமுருகேசன், சுரேஷ்குமார், சரவணக்குமார். ராமர், அதிஷ்ட மணி, ரிக்டா, ஜாக்குலின் ஜெயா, ஜான்சிராணி, சுயம்பு, விஜயகுமார், பணிக்குழு உறுப்பினர் டாக்டர் சோமசுந்தரி, கல்விக்குழு உறுப்பினர் விஜயகுமார், பொதுசுகாதாரக்குழு உறுப்பினர் பச்சிராஜ், தெய்வேந்-திரன், வைதேகி, நகரமைப்புகுழு தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சொத்துவரி உயர்த்தப்பட்டதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இதை வலியுறுத்தி 7 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Similar News