உள்ளூர் செய்திகள் (District)
மரக்கன்று நடும் விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

துறையூரில் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2022-05-08 08:46 GMT   |   Update On 2022-05-08 08:46 GMT
அடர் வன குறுங்காடுகளை உருவாக்கும் நோக்கில் துறையூரில் மரக்கன்றுகள் நடும் விழா நடை பெற்றது.
திருச்சி:

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டும், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டும் மியாவாக்கி என்னும் அடர் வன குறுங்காடுகளை உருவாக்கும் நோக்கில் மரக்கன்று நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் செல்வராணி, துணைத் தலைவர் மெடிக்கல் என். முரளி ஆகியோர் தலைமை வகித்தனர். நகராட்சி ஆணையர் (பொ) முருகராஜ் முன்னிலை வகித்தார்.

 இந்நிகழ்ச்சியில் வேம்பு, அரசமரம், புங்கமரம் உள்ளிட்ட ஏராளமான மர வகைகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.  

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், சுதாகர், சுமதி, முத்து மாங்கனி, ஜானகிராமன், அம்மன் பாபு, நகராட்சி சுகாதார அலுவலர் மூர்த்தி, உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News