உள்ளூர் செய்திகள் (District)
மருத்துவமனை கட்டுவதற்கான நில பத்திரத்தை கலெக்டர் அருண்தம்புராஜிடம் வழங்கிய விவசாயி வெங்கடேஸ்வரன்.

மருத்துவமனை கட்ட பூர்விக நிலபத்திரத்தை கலெக்டரிடம் வழங்கிய விவசாயி

Published On 2022-05-12 09:09 GMT   |   Update On 2022-05-12 09:09 GMT
வடுகச்சேரியில் மருத்துவமனை கட்ட ரூ.80 லட்சம் பூர்விக நிலபத்திரத்தை கலெக்டரிடம் விவசாயி வழங்கினார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வடுகச்சேரி ஊராட்சியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அவசரத்திற்கு மருத்துவமனை செல்ல வேண்டுமானால் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினம் அல்லது திருவாரூர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.இதனால் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

 இதனை போக்கும் வகையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடேஸ்வரன் என்பவர் தனக்கு சொந்தமான சுமார் ரூ.80 லட்சம் மதிப்பிலான 37 சென்ட் பூர்வீக இடத்தை மருத்துவமனை கட்ட வழங்கியதோடு இல்லாமல், அந்த இடத்தில் குடியிருந்த 16 குடும்பங்களுக்கு , தனது சொந்தமான 6 லட்சம் மதிப்பிலான நிலத்தில் மாற்று இடம் வழங்கியுள்ளார்.

இதற்கு உரிய பத்திரத்தை நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ்யிடம் அதற்கான பத்திரத்தை நேரில் வழங்கினார். இந்த மனித நேயம் உள்ள செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

Similar News