உள்ளூர் செய்திகள் (District)
தேர்வு

தமிழ்நாடு ரெயில்வே தேர்வில் 75.7 சதவீதம் பேர் பங்கேற்பு

Published On 2022-05-12 11:00 GMT   |   Update On 2022-05-12 11:00 GMT
தமிழ்நாடு ரெயில்வே தேர்வில் 75.7 சதவீதம் பேர் பங்கேற்றனர்.
மதுரை

இந்திய ரெயில்வேயில் 7124 ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களுக்கு மே 9-ம் தேதி இரண்டாம் கட்ட கணினி தேர்வு நடந்தது. 

இதன் ஒரு பகுதியாக சென்னை ெரயில்வே தேர்வாணயம் நடத்திய முதல்கட்ட தேர்வில் 12,028 பேர் வெற்றி பெற்றனர். 

அவர்களில் 9,107 பேர் இரண்டாம் கட்ட பரீட்சை எழுதினர். இதன் மூலம் 75.7 சதவீதம் பேர் தேர்வுகளில் பங்கேற்று உள்ளனர்.

 அவர்களுக்கு முதல் முறையாக ஆதார் அட்டை அடையாள சோதனை மூலம் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.

ரெயில்வே பணியாளர் 2-ம் கட்ட தேர்வுக்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு 12 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. மேலும் பல்வேறு ரெயில்களில் கூடுதல் ரெயில்  பெட்டிகள் இணைக்கப்பட்டன.

மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தித்தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Similar News