உள்ளூர் செய்திகள் (District)
போராட்டம்

மின்சாரம் வழங்காததால் பொன்னேரி மின்நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

Published On 2022-05-28 07:08 GMT   |   Update On 2022-05-28 07:08 GMT
மின்சாரம் வழங்காததால் பொன்னேரி மின்நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி:

மீஞ்சூர் ஒன்றியம் ஆலாடு ஊராட்சியில் அடங்கிய பொழுது விடிஞ்சா மேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் மின்சாரம் சரியாக வராததால் புதிய மின் மாற்றி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. 3 மாதத்திற்கு முன்பாக வேலைகள் நடைபெற்றிருந்த நிலையில் மின்சாரம் இன்றும் வழங்கவில்லை. இதனால்அப்பகுதி மக்கள் குடிநீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் வழக்கறிஞர் அணி செயலாளர் தேவராசு கொள்கை பரப்பு செயலாளர் அருள்தாஸ் தலைமையில் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். ஆலாடு ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் யாபேசு, மோகன், அம்பேத் தீனா, திருமலை பாஸ்கர், மற்றும் கிராம பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News