உள்ளூர் செய்திகள்
திருமருகலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் நடந்தது.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டும்

Published On 2022-05-30 08:53 GMT   |   Update On 2022-05-30 08:53 GMT
பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது.
 கூட்டத்திற்கு சங்க ஒன்றிய உறுப்பினர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளி ஒன்றிய செயலாளர் தவமணி வரவேற்றார். 

மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா, மாவட்ட தலைவர் சுபாதேவி, மாவட்ட துணை செயலாளர் மாலா ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்மு றையை தடுத்து நிறுத்த வேண்டும், 100 நாள் வேலைக்கு ஆன்லைன் பதிவு செய்வதை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஒன்றியத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர் கஸ்தூரி மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க நிர்வாகி புஷ்பலதா நன்றி கூறினார்.
Tags:    

Similar News