உள்ளூர் செய்திகள் (District)

நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 20,641 மாணவர்கள் எழுதுகிறார்கள்

Published On 2023-04-05 07:41 GMT   |   Update On 2023-04-05 07:41 GMT
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை (6-ந் தேதி) தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.
  • அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 300 பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

நாமக்கல்:

தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு, மார்ச் 13-ல் தொடங்கி, கடந்த 3-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அதேபோல்,

பிளஸ்-1 பொதுத்தேர்வு, மார்ச் 14-ல் தொடங்கி இன்று முடிகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை (6-ந் தேதி) தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 300 பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 94 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 94 முதன்மை கண்காணிப்பா ளர்கள், 95 துறை அலு வலர்கள், 1,731 அறை கண்காணிப்பாளர்கள், 140 பறக்கும் படை உறுப்பி னர்கள், 9 கட்டுக்காப்பு மைய அலுவலர்கள் என மொத்தம் 2,069 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும், பொதுத் தேர்வு எழுதும் மையங்களுக்கு, பலத்த போலீஸ் பாது காப்புடன், வினாத்தாள் எடுத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. தேர்வில் எவ்வித விதிமீறலும் நடக்காமல் இருக்க, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Tags:    

Similar News