சாத்தான்குளத்தில் 235 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- கனிமொழி எம்.பி. வழங்கினார்
- சாத்தான்குளம் தேர்வுநிலை பேரூராட்சியில் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி-பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
- விழாவில் ஆதிதிராவிடர் மக்களுக்கு 57 பேருக்கு இணைய வழி இ-பட்டாக்களும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தேர்வுநிலை பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி-பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
நலத்திட்ட உதவிகள்
விழாவில் 235 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.
தொடர்ந்து சமூகபாது காப்பு திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித ்தொகை, ஆதரவற்ற விதவை உதவிதொகை மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித் தேவை உள்ளிட்ட அரசு நலத் திட்டங்களை 77 பேருக்கு வழங்கினார்.
வீட்டுமனைப் பட்டா
அதேபோல வருவா ய்த்துறை சார்பாக பெரிய தாழை, படுக்கப்பத்து, கட்டாரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 101 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், ஆதிதிராவிடர் மக்களுக்கு 57 பேருக்கு இணைய வழி இ-பட்டாக்களும் கனிமொழி எம்.பி. வழங்கி பேசினார்.
விழாவில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர், தாசில்தார் தங்கையா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சின்னத்தாய், தி.மு.க. மாணவர் அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், முதலூர் பஞ்சாயத்து தலைவர் பொன்முருகேசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயபதி, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி அலெக்ஸ் புருட்டோ, ஆழ்வை ஒன்றிய செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக சாத்தான்குளம் பேரூராட்சி தலைவர் ரெஜினா ஸ்டெல்லாபாய் வரவே ற்றார். முடிவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜோசப் நன்றி கூறினார்.