உள்ளூர் செய்திகள்

புளியங்குடியில் நாய் கடித்தவர்களுக்கு நகராட்சி சேர்மன் விஜயா சவுந்தரபாண்டியன் ஆறுதல் கூறிய காட்சி.

புளியங்குடியில் 26 பேரை கடித்த வெறி நாய் பிடிபட்டது

Published On 2022-06-14 10:14 GMT   |   Update On 2022-06-14 10:14 GMT
  • புளியங்குடி சாலையில் சுற்றித்திரிந்த ஒரு நாய்க்கு திடீரனெ வெறி பிடித்தது.
  • சிறுவன் உள்ளிட்ட 26 பேரை கடித்து குதறியது

புளியங்குடி:

புளியங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக சாலைகளில் நாய்கள் சுற்றித்திரிந்தது. இந்நிலையில் நேற்று அதில் ஒரு நாய்க்கு திடீரனெ வெறி பிடித்தது.

சாலையில் சுற்றித்திரிந்த அந்த நாய் அந்த வழியாக சென்றவர்களை கடிக்க ஆரம்பித்தது. இதில் பள்ளி சென்று கொண்டிருந்த 9 வயது சிறுவன் மற்றும் பெண்கள், வயதான ஆண்கள் என 26 பேரை அந்த நாய் கடித்து குதறியது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் புளியங்குடி அரசு மருத்துவ–மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த நகர சேர்மன் விஜயா சவுந்தரபாண்டியன் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு பழம், பிரட் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து மருத்துவர்களிடம் தேவையான சிகிச்சைகளை விரைந்து வழங்க அறிவுறுத்தினார். வெறிநாயை உடனடியாக பிடிக்க தனிக்குழுவை அமைக்க நகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அதன்படி இன்று காலை அந்த குழு அமைக்கப்பட்டு, அவர்கள் வெறிநாயை பிடித்தனர். பின்னர் அதனை காட்டுப்பகுதியில கொண்டு விட்டனர்.

Tags:    

Similar News