உள்ளூர் செய்திகள்

கோவையில் குட்கா விற்ற 3 பேர் கைது

Published On 2022-10-16 09:28 GMT   |   Update On 2022-10-16 09:28 GMT
  • பெட்டிக்கடையில் குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது
  • 45 கிலோ குட்கா, ரூ. 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை

குட்கா பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது குட்கா பதுக்கி விற்பனை செய்த கோவை இடையர்வீதியை சேர்ந்த ராஜூசிங் (வயது 30), செல்வபுரம் முத்துசாமி காலனியை சேர்ந்த நரேந்திரன்(35) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 45 கிலோ குட்கா, ரூ. 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோன்று போத்தனூர் கணேசபுரம் விட்டல் நகரில் ஒரு மளிகைக்கடையில் குட்கா பதுக்கி விற்ற கருப்பசாமி என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்து, 14 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News