தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
- தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 2 செல்போன்கள், 1 மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
பட்டீஸ்வரம்:
கும்பகோணம் டவுன் புறப்பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் டவுன் புறப்பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்துக்கு வந்த தகவலின் பேரில் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதன் பேரில், கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் மேற்பார்வையில், உதவி இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன், சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், செந்தில், நாடிமுத்து, ஜனார்த்தனன், பார்த்திபநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மணஞ்சேரி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மகன் மூர்த்தி (வயது 23 ), சந்தனாள்புரத்தை சேர்ந்த ஏசுராஜ் மகன் பிரசாந்த் (23), பெருமாண்டியை சேர்ந்த பூபதி மகன் மகேந்திரன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 2 செல்போன்கள், 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.