உள்ளூர் செய்திகள்

கல்லூரியில் 2022-23-ம் கல்வியாண்டின் சிறந்த மாணவிக்கான விருதினை தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி சுகபிரியா சிறப்பு விருந்தினரிடம் இருந்து பெற்றுக்கொண்ட காட்சி.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி 39-வது ஆண்டு விழா

Published On 2023-04-26 08:48 GMT   |   Update On 2023-04-26 08:48 GMT
  • கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது.
  • சிறப்பு விருந்தினருக்கு கல்லூரி துணைத்தலைவர் மற்றும் தாளாளர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி ேநஷனல் பொறியியல் கல்லூரியில் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது.

கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல் முன்னிலை வகித்தார்.

ஐதராபாத், எல்.டி.ஐ, மைண்ட்ரீ ஹெல்த்கேர் மற்றும் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் குளோபல் டெலிவரி ஹெட்டும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான ஆர்.உமா சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் தமது உரையில் கல்லூரியின் முதன்மையான நோக்கம் தரமான உயர்கல்வியை வழங்குவதாகும். கல்லூரியின் ஐ.இ.இ.இ. சேப்டர் வாயிலாக தொடங்கிய தனது வாழ்க்கை, தான் பயின்ற கல்லூரிக்கே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.

மேலும், அவர் தொழில்நுட்பம் தொடர்ந்து மாறி வருவதால், மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்த வேண்டும் என்றும், படைப்பாற்றல் மிக்கவர்களாக இருந்தால் பொருளாதார மந்த நிலையைக் கூட மிஞ்சலாம் என்றும் கூறினார். மேலும் மாணவர்கள் முதலில் தாம் மென்மேலும் வளர வேண்டும் என்ற நோக்கம் மேலோங்கி இருக்க வேண்டும் என்றும், இரண்டாவதாக, தொடர்ந்து அறிவை, திறமையை தேடுவதைத் தொடர வேண்டும், மூன்றாவதாக தரம் மற்றும் செயல்திறனுக்கான திறவுகோலான தொழில்நுட்பம் முறையைப் பேண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் "என்னால் முடிந்தால் உங்களாலும் முடியும்...." என்று கூறி தனது உரையை முடித்தார்.

விழாவில், கல்லூரிப் பேராசிரியை எல்.கலைவாணி வரவேற்றார். சிறப்பு விருந்தினருக்கு கல்லூரி துணைத்தலைவர் மற்றும் தாளாளர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் 2022-23-ம் கல்வியாண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார்.

சிறப்பு விருந்தினரை பேராசிரியர் எஸ். அய்யாராஜா அறிமுகம் செய்து வைத்தார். மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அனைத்துத் துறை முதலாம், 2-ம், 3-ம் மற்றும் 4-ம் ஆண்டு பருவத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்குப் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

2022-23-ம் கல்வியாண்டின் சிறந்த மாணவருக்கான விருதினை எந்திர பொறியியல் துறை மாணவர் டி.ஆனந்தவேல் மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை மாணவர் எஸ்.பொன் சரவணக்குமார் ஆகியோருக்கு பகிர்ந்தும், சிறந்த மாணவிக்கான விருதினை தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி கே.சுக பிரியாவுக்கும் வழங்கப்பட்டது.

மேலும், மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்க ளிடமிருந்து நிதி உதவி பெற்று ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் கல்லூரி பேராசிரியர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

விழாவில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் எஸ்.மதிவண்ணன், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ஆர்.முத்துக்குமார் நன்றி கூறினார்.

விழாவின் ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோரின் ஆலோசனைப்படி பேராசிரியர் கே.மொஹைதீன் பிச்சையின் ஒருங்கிணைப்பில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News