உள்ளூர் செய்திகள்

தாழையூத்து அருகே கஞ்சாவுடன் 5 வாலிபர்கள் கைது

Published On 2023-02-28 08:52 GMT   |   Update On 2023-02-28 08:52 GMT
  • தாழையூத்து அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.43,390, கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

நெல்லை:

தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்ல தங்கம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது தாழையூத்து அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சென்று பார்த்த போது ராஜவல்லிபுரம், வடக்குத் தெருவை சேர்ந்த இசக்கிபாண்டி (வயது 20), தாழையூத்து, காமராஜர் நகரை சேர்ந்த பாஸ்கர் (20) ஆகியோர் மேல்நிலைப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை சோதனை செய்த போது இருவரும் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்து கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சி.என்.கிராமம், மேலத்தெருவை சேர்ந்த பூல்பாண்டி(21), தாழையூத்து, விஷ்வகர்மாநகரை சேர்ந்த ஆறுமுகம் (19), பேட்டை, அன்னதான விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் (19) ஆகிய 3 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவர்களை பிடித்து சோதனை செய்த போது அவர்களும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.43,390 மற்றும் 340 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News