உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் விடுமுறை நாளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 66 பேர் கைது

Published On 2023-04-05 09:12 GMT   |   Update On 2023-04-05 09:12 GMT
  • கோவை மாநகரில் போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர்.
  • 997 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை,

மகாவீர் ஜெயந்தியை யொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் டாஸ்மாக் பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் கோவை மாநகரில் போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். குனியமுத்தூர் அறிவொளி நகர், சிங்காநல்லூர் மாணிக்கம் நகர், போத்தனூர் சாரதா மில் ரோடு, சரவணம்பட்டி சிவானந்தாபுரம், ரத்தினபுரி கண்ணப்பநகர், காந்திபுரம் 3-வது வீதி, செட்டி வீதி, வைசியாள் வீதி, பேரூர் பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 398 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதே போல கோவை புறநகர் பகுதிகளான பெரியநாயக்கன் பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சப்-டிவி சனுக்குட்பட்ட போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 53 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 596 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.

Tags:    

Similar News