உள்ளூர் செய்திகள்

கோவை மாவட்டத்தில் 8 போலீசார் அண்ணா விருதுக்கு தேர்வு

Published On 2022-09-15 10:39 GMT   |   Update On 2022-09-15 10:39 GMT
  • நடப்பாண்டு சிறப்பாக பணியாற்றிய 100 பேருக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது
  • வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு 200-க்கும் மேற்பட்ட வெகுமதிகளை பெற்றுள்ளார்

கோவை

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா விருது வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பாண்டு சிறப்பாக பணியாற்றிய 100 பேருக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் சின்னியம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பல வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு 200-க்கும் மேற்பட்ட வெகுமதிகளை பெற்றுள்ளார்.

இதேபோன்று கோவை ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பிரதாப் சிங், உக்கடம் போலீஸ் நிலைய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் ஜெயஸ்ரீ தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். போலீஸ் ரெக்ரூட் பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் பாலு, கிரைம் பிரென்ச் சி.ஐ.டி சப் -இன்ஸ்பெக்டர் ருக்குமணி, கோவை போலீஸ் டெலி கம்யூனிகேஷன் பிரான்ச் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 8 போலீசார் அண்ணா விருதுக்கு தேர்வாகி யுள்ளனர். இவர்களுக்கு அண்ணா பதக்கமும், ரூ.10 ஆயிரம் வெகுமதியும் வழங்கப்படும்.

கோவை மாவட்டத்தில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி அண்ணா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு போலீஸ் அதிகாரிகள், போலீசார், மற்றும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News