உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தி.மு.க. ஒன்றிய செயலர் மீது தாக்குதல்; பேரூராட்சி துணைத்தலைவர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு

Published On 2022-07-30 05:20 GMT   |   Update On 2022-07-30 05:20 GMT
  • தி.மு.க. ஒன்றிய செயலரை வீடு புகுந்து தாக்கியதாக பேரூராட்சி துணைத் தலைவர், பெண் காவலர் உள்ளிட்டோரை கும்பல் தாக்குதல் நடத்தியது.
  • இது மோதல் தொடர்பாக 8 பேர் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்கட்சி தேர்தல் பிரச்சினையில் இரவு தி.மு.க. ஒன்றிய செயலரை வீடு புகுந்து தாக்கியதாக பேரூராட்சி துணைத் தலைவர், பெண் காவலர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீரபாண்டியைச் சேர்ந்தவர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலர் ரத்தின சபாபதி, இவர் வீரபாண்டி யில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் இரவு தி.மு.க.வைச் சேர்ந்த சிலருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது உள்கட்சி தேர்தலில் வீரபாண்டி பேரூர் நிர்வாகிகள் குறித்து வெளியான அறிவிப்பினால் அதிருப்தி அடைந்திருந்த அதே கட்சியைச் சேர்ந்த சிலர் ரத்தினசபாபதி வீடு புகுந்து அவரையும், அவரு டன் இருந்த உப்பார்பட்டி யைச் சேர்ந்த முத்து க்குமாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ரத்தினசபாபதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டார். இச்சம்பவம் குறித்து ரத்தினசபாபதி அளித்த புகாரின் பேரில், வீரபாண்டியை சேர்ந்த மகேந்திரன், ராஜேஷ், தாமரைக்கண்ணன், பிரபாகரன், வினோத், தீனா, வீரபாண்டி பேரூ ராட்சி துணைத்தலைவர் சாந்தகுமார், பெண் காவலர் கவிதா ஆகிய 8 பேர் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

Tags:    

Similar News