உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண் உள்பட 9 பேர் கைது

Published On 2023-04-30 08:11 GMT   |   Update On 2023-04-30 08:11 GMT
  • போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
  • இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் ராஜாராம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், திட்டக்குடி ஆகிய உட் கோட்டத்திற்கு உட்பட்ட போலீசார் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் அண்ணாமலை நகர், கடலூர் திருப்பாதிரிப்புலியூர், புதுப்பேட்டை, மங்கலம்பேட்டை, சோழதரம், புவனகிரி, ராமநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடியாக கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்த சிதம்பரம் புலவேந்திரன், திருப்பாதிரிப்புலியூர் சிவப்பிரகாசம், பண்ருட்டி ஜெயராமன், விருத்தாச்சலம் பெரியசாமி, சோழதரம் ரகுபதி, புவனகிரி சாவித்திரி, ராஜி, ராமநத்தம் சாந்தி உட்பட 9 ேபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா ஆகியவற்றை அதிரடியாக பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News