உள்ளூர் செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 9-ம் வகுப்பு மாணவி கடத்தல்

Published On 2022-06-11 09:48 GMT   |   Update On 2022-06-11 09:48 GMT
  • கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
  • போலீசார் மாணவியை தேடி செங்கல்பட்டு விரைந்து உள்ளனர்.

வடவள்ளி,

கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அவருக்கு பொற்றோர் ஆன்லையின் வகுப்பிற்காக செல்போன் வாங்கி தந்தனர். அதில் மாணவி இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் செய்தார். பின்னர் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களிடம் பேசி வந்தார்.

அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்தநிலைய சம்பவத்தன்று காலை மாணவி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் பல இடங்களில் தேடி பார்த்தனர். மாணவி கிடைக்கவில்லை.இதையடுத்து மாணவின் பெற்றோர் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இன்ஸ்டாகிராம் நண்பர் செங்கல்பட்டு வாலிபர் கோவை வந்ததும், பின்னர் தொண்டாமுத்தூர் வந்து மாணவிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தொண்டாமுத்தூர் போலீசார் மாணவியை தேடி செங்கல்பட்டு விரைந்து உள்ளனர். அங்கு மாணவியை மீட்டு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News