உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்திய தர்மகர்த்தா மீது வழக்குபதிவு

Published On 2023-04-11 07:24 GMT   |   Update On 2023-04-11 07:24 GMT
  • தமிழகத்தில் உள்ளூர் கோவில் பண்டிகையின் போது பல்வேறு நிகழ்ச்சிக ளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
  • இந்த நிகழ்ச்சிகள் நடத்து வதற்கு அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் அனுமதி பெறவேண்டும். ஒரு சில இடங்களில் அனு மதி பெறாமல், உள்ளூர் செல்வாக்கை பயன்படுத்தி நடத்தப்பட்டு வருகிறது.

பரமத்திவேலூர்:

தமிழகத்தில் உள்ளூர் கோவில் பண்டிகையின் போது பல்வேறு நிகழ்ச்சிக ளுக்கு ஏற்பாடு செய்யப்படும். கரகாட்டம், நையாண்டி மேளம், ஒயிலாட்டம் மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இந்த நிகழ்ச்சிகள் நடத்து வதற்கு அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் அனுமதி பெறவேண்டும். ஒரு சில இடங்களில் அனு மதி பெறாமல், உள்ளூர் செல்வாக்கை பயன்படுத்தி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், ஒருவந்துார் ஊராட்சி செல்லிபாளை யத்தில், மதுரை வீரன் திருவிழா, நேற்று தொடங்கி 2 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து விழா தொடங்குவதற்கு முதல் நாள், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் அனுமதி பெறவில்லை என தெரிகிறது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் மோகனுார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல், அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்திய கோவில் தர்கர்த்தா மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் இது போன்று அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News