உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு தர்ப்பூசணி பழங்களை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

பொதுமக்களுக்கு தர்ப்பூசணி பழங்கள் வழங்கிய கலெக்டர்

Published On 2023-03-27 08:32 GMT   |   Update On 2023-03-27 09:50 GMT
  • வெயில் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் வெளியில் சென்று வருகின்றனர்.
  • நீர்மோர் பந்தலை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

தரங்கம்பாடி:

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

வெப்ப சலனம் அதிகம் உள்ள காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் வெளியில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், வெயிலை சமாளிக்க பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற நகரின் முக்கிய இடங்களில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல், மயிலாடுதுறை ஆஞ்சநேயர் கோவில் அருகே தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

பின்னர், பொதுமக்களுக்கு நீர்மோர், தர்ப்பூசணி பழங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர் சதீஷ்குமார், தன்னார்வலர் ஆனந்தன் மற்றும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News