உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி பேசினார்.

செம்பனார்கோவிலில், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

Published On 2023-03-03 09:42 GMT   |   Update On 2023-03-03 09:42 GMT
  • கிராமங்களில் இணையதள வசதி தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • பாதாள சாக்கடை வழிந்தோடுவதை தடுக்க விரைவில் ரூ.99 கோடி செலவில் பணிகள் தொடங்கப்படும்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் செம்பனார்கோவிலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஏ.பி. மகாபாரதி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் ஆகும்.

விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை தெரியப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்.

வருகிற ஒரு ஆண்டுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அப்போது தான் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உருவாக்கப்–படும்.

குறிப்பாக சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும்.

கிராமங்களில் இணையதள வசதி தடை–யின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

குப்பைகள் இல்லா கிராமத்தை உருவாக்க வேண்டும்.

மயிலாடு–துறையில் நீண்ட காலமாக பாதாள சாக்கடை வழிந்–தோடுவதை தடுக்க விரைவில் ரூ.99 கோடி செலவில் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து கலெக்டரிடம் தெரிவித்தனர்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் மஞ்சுளா மற்றும் சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News