விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா
- விவசாய கருவிகள் வழங்கும் விழா நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையிலும், முத்தூட் குழும தஞ்சாவூர் பிராந்திய மேலாளர் கோட்டை ராஜன் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
- மாற்றுதிறனாளிகள் வாழ்வாதார உதவி, பேரிடர் காலங்களில் நிவாரண உதவி உட்பட விவசாயிகளுக்கும் தற்போது உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி:
முத்தூட் குழுமத்தின் சார்பில்திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் விவசாயிகளுக்கு விவசாய கருவிகள் வழங்கும் விழா நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையிலும், முத்தூட் குழும தஞ்சாவூர் பிராந்திய மேலாளர் கோட்டை ராஜன் முன்னிலையிலும் நடைப்பெற்றது. பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். முத்தூட் குழும சமூக பொறுப்பு திட்ட மேலாளர் ஜெயக்குமார் திட்டம் குறித்து பேசும்போது, முத்தூட் குழுமம் சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ உதவி, டயாலிசிஸ், கல்வி உதவி, விதவைகளின் பெண்கள் திருமண உதவி, வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவி, மாற்றுதிறனாளிகள் வாழ்வாதார உதவி, பேரிடர் காலங்களில் நிவாரண உதவி உட்பட விவசாயிகளுக்கும் தற்போது உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் 175 விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி பேசினார். விழாவில் நகராட்சி ஆணையர் பிரபாகரன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி, வட்டார மருத்துவ அலுவலர் கெளரி, நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ் , முத்தூட் கோட்ட மேலாளர் வினோத் ரமேஷ், கிளை மேலாளர் அகல்யா, நுணாக்காடு ஊராட்சி தலைவர் சின்னையன் உட்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துக்கொண்டனர். முடிவில் பாலம் திட்ட அலுவலர் பரந்தாமன் நன்றி கூறினார்.