பேட்டையில் கல்லூரி மாணவியை தாக்கிய கும்பல்- தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் மீது வழக்கு
- முருக பெருமாள், குணசேகரன் வீட்டின் அருகே நின்று கொண்டு அவதூறாக பேசி உள்ளார்.
- தாக்குதலில் தனலட்சுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
பேட்டை மலையாளமேடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் தனலட்சுமி (வயது 23), நர்சிங் கல்லூரி மாணவி.
தாக்குதல்
இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருக பெருமாள். சம்பவத்தன்று முருக பெருமாளின் மகனுக்கும், குணசேகரனின் மகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பின்னர் சமரசம் பேசி முடித்துள்ளனர்.
இந்நிலையில் முருக பெருமாள், குணசேகரன் வீட்டின் அருகே நின்று கொண்டு அவதூறாக பேசி உள்ளார். மேலும் முருக பெருமாள், அவரது மனைவி அமுதா, மகன் செல்லத்துரை ஆகியோர் சேர்ந்து குணசேகரனின் மகள் தனலட்சுமியை கம்பியால் தாக்கி உள்ளனர். இதில் தனலட்சுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
4 பேர் மீது வழக்கு
அப்போது அமுதாவின் சகோதரரும், தி.மு.க. பிரமுகருமான மலை கண்ணன் தனலட்சுமியை மிரட்டி உள்ளார். படுகாயம் அடைந்த தனலட்சுமி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் முருக பெருமாள் உள்பட 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.