உள்ளூர் செய்திகள்

விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் பரிசு வழங்கினார்.

துளசியாபட்டினத்தில் அவ்வை பெருவிழா; போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

Published On 2023-03-21 07:31 GMT   |   Update On 2023-03-21 07:31 GMT
  • ஒளவையின் படைப்புகள் காலத்தால் அழியாதவை.
  • அவ்வைக்கு துளசியாபட்டினத்தில் ரூ. 18.5 கோடியில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, துளசியாபட்டினத்தில் உள்ள ஔவையார் கோவிலில் தமிழக அரசு சார்பில் 49-வது அவ்வை பெருவிழா தொடங்கியது.

3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

இந்த அவ்வை பெருவிழா நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விழாவாகும். ஒளவையின் படைப்புகள் காலத்தால் அழியாதவை, அவற்றை நாம் பயனுள்ளதாக மாற்றி கொள்ள வேண்டும்.

மேலும், ஒளவைக்கு துளசியாபட்டினத்தில் ரூ. 18.5 கோடியில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், தஞ்சை கலை பண்பாட்டு துறையினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, சிறப்பு பட்டிமன்றம் ஆகியவைகள் நடந்தது.

பின்னர், இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் பரிசு வழங்கினார்.

விழாவில் மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, ஊராட்சி தலைவர்கள் தமிழ் செல்வி, வனிதா, ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News