உள்ளூர் செய்திகள் (District)

அரசு மருத்துவமனை முன்பு நிழற்குடை அமைக்க வேண்டும்

Published On 2023-06-21 10:29 GMT   |   Update On 2023-06-21 10:29 GMT
  • பொது மருத்துவமனைக்கு மக்கள் தங்களது சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
  • சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அப்பகுதியில் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது.

திருவோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் உள்ள திருவோணம் அரசு மேம்படுத்தப்பட்ட பொது மருத்து வமனைக்கு நாளொன்றுக்கு சராசரியாக 200 முதல் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்களது சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

மேலும் அந்த மருத்துவ மனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படும்.

கர்ப்பிணி பெண்கள் ஏராள மானவர் வந்து தங்களது உடல்நிலை பரிசோதனை செய்து கொண்டும் குழந்தைகள் பிறக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து கந்தர்வகோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருவோணம் அரசு மருத்துவமனை முன்பு அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடையை நெடுஞ்சாலை துறை சாலை விரிவாக்கம் செய்வதற்காக அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அப்பகுதியில் நிழற்குடை அமைக்கப்படாமல் இருப்பதால் மருத்துவ மனைக்கு செல்லும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் நிழற்குடை இன்றி வெயிலிலும் மழையிலும் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய நிழற்குடை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள், கோரி க்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News