மரக்கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து பணம் திருடிய பெண்
- கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ.6 ஆயிரத்தை திருடினார்.
- கடையின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது பொருட்கள் வழங்குவது போல் வந்து நடித்து அந்த பெண் திருடி சென்றது தெரியவந்தது
குனியமுத்தூர்:
கோவை ஆத்துப்பாலத்தை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 40). இவர் அதே பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவரது கடைக்கு 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் வந்தார்.
அவர் கடையில் உள்ள மர பொருட்களை பார்த்தார். கடையின் மேலாளர் பொருட்களின் விலையை கூறி கொண்டு இருந்தார்.
மேலாளர் கடையின் வேரு இடத்துக்கு சென்றார். அப்போது கடையில் இருந்த அந்த பெண் யாரும் இல்லாததை பார்த்து திடீரென கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ.6 ஆயிரத்தை திருடினார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார்.
சிறிது நேரம் கழித்து மேலாளர் வந்து பார்த்தபோது பணம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அவர் கடை உரிமையாளர் ஷாஜகானுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் கடையின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது பொருட்கள் வழங்குவது போல் வந்து நடித்து அந்த பெண் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஷாஜகான் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி காட்சிகளை கைப்பறினர்.
இதையடுத்து போலீசார் அந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.