உள்ளூர் செய்திகள்

விடுமுறை அளிக்காத 121 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Published On 2023-08-17 09:56 GMT   |   Update On 2023-08-17 09:56 GMT
  • சுதந்திர தின‌நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.
  • மொத்தம் 121 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தொழிலாளா் துறையின் தஞ்சாவூா் உதவி ஆணையா் (சட்ட அமலாக்கம்) கமலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூா், கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவ னங்களில், தொழிலாளா் துணை ஆய்வா்கள், தொழிலாளா் உதவி ஆய்வா்கள் தேசிய விடுமுறை நாளான சுதந்திர தினநாளன்று (ஆகஸ்ட்15) தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, அவா்களுடைய சம்மதத்துடன் இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என 133 நிறுவனங்களில் ஆய்வு செய்தனா்.

இதில், சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 69 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 43 முரண்பாடுகளும், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் 9 முரண்பாடுகளும் என மொத்தம் 121 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News