உள்ளூர் செய்திகள்

ரவுடிகளை வைத்து மிரட்டுபவர் மீது நடவடிக்கை நாமக்கல் எஸ்.பி.யிடம் கிராம மக்கள் மனு

Published On 2022-06-21 10:38 GMT   |   Update On 2022-06-21 10:38 GMT
  • நாமக்கல் அருகே ரவுடிகளை வைத்து மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எஸ்.பி.யிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
  • இதுபற்றி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் பொன்னேரிப்பட்டி கிராமத்தில் கோவில் வழித்தட பிரச்னை காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் சிலர் வெளியுரில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து மிரட்டல் விடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

சமீபத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதியின் கணவர் தனசேகரன் தாக்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் உள்ளதால், பொன்னேரிப்பட்டி கிராமத்திற்குள் நுழையும் ரவுடிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தைச் சேர்ந்தோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உறுதியளித்தார்.

Tags:    

Similar News