சிதம்பரத்தில் அதிரடி: வெடி மருந்து குடோனுக்கு சீல்
- சிதம்பரத்தில் வெடி மருந்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
- வெடிபொருள் தயார் செய்துவிற்பனை செய்வதற்கு உரிமம் பெற்றுள்ளார்.
கடலூர்:
சிதம்பரம் இளமையாக்கினார் கோயில்தெருவை சேர்ந்தசெந்தில் என்பவர்சிதம்பரம் புறவழிச்சாலையில் வெடிபொருள் தயார் செய்துவிற்பனை செய்வதற்கு உரிமம் பெற்றுள்ளார். கடந்த 2021ம்ஆண்டு தேர்தல் நேரத்தில் பறக்கும் படை அதிகாரி கள் இந்த குடோனில் திடீர் சோதனை செய்தபோது அனுமதித்த அளவுக்கு அதிகமாக வெடி பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அதிகாரிகளின் தொடர் விசாரணையில் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியரால் இந்த உரிமம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவிநேற்று மாலை இந்த வெடிமருந்து குடோனில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஆவணங்கள் சரிபார்க்கப் பட்டதில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வெடிபொருள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 582 வானவெடிகள், 35 நாட்டு சணல் வெடிகுண்டு,7 கிலோ கரி, 250 கிராம் சல்பர், 300 கிராம் பொட்டாசியம், வெடி மருந்து 1800 கிராம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவிஅந்த வெடிமருந்து குடோனுக்கு சீல் வைத்தார். பின்னர் வெடி மருந்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதுகுறித்து கோட்டாட்சியர் ரவி, கடலூர் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினார்.