உள்ளூர் செய்திகள்

கொரடாச்சேரி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

கொரடாச்சேரி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை- ஒன்றியக்குழு தலைவர் பேச்சு

Published On 2023-01-22 09:17 GMT   |   Update On 2023-01-22 09:17 GMT
  • உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி ஆதாரத்தை வைத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.
  • உத்தரங்குடி மயானத்தில் சாலை மற்றும் மயாண கொட்கை அமைத்து தர வேண்டும்.

திருவாரூர்:

கொரடாச்சேரி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் உமாப்பிரியா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் துணைத்தலைவர் பாலச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன், முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தீர்மானங்களை உதவியாளர் மகேந்திரன் வாசித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது. நாகூரான் (அதிமுக): மேல மற்றும் கீழ உத்தரங்குடி மயானத்தில் சாலை மற்றும் மயாண கொட்கை அமைத்து தர வேண்டும்.

சத்தியேந்திரன் (திமுக): எண்கண் ஊராட்சியில் ஈமகிரியை கட்டிடம் வேண்டும்.

ஏசுராஜ் (அதிமுக): தியாகராஜபுரம் ஆதி திராவிடர் தெரு சாலை, நீலக்குடி சுடுகாடு மயான கொட்டகை, மயானம் செல்லும் சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

உமாமகேஸ்வரி (திமுக): தியாகராஜபுரம் ஊராட்சி சிராய்குடி மயான சாலை அமைக்க வேண்டும். இங்குள்ள குடிநீர் தொட்டிக்கு மூடி இல்லாமல் உள்ளது உடனே சீரமைக்க வேண்டும்.

ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் பாலச்சந்திரன்: உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி ஆதாரத்தை வைத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் மற்ற பணிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

இதைத்தொடர்ந்து தலைவர் உமாப்பிரியா உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில், கோடை காலம் வருவதால் மக்களின் அடிப்படையாக குடி நீர், மின்சாரம், தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். படித்துறை மற்றும் வாய்க்கால் மதகுகளை ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதத்தில் முடித்து விட வேண்டும்.

மேலும் படித்துறை, கல்வெட்டு, தேவைப்படும் உறுப்பினர்கள் உடனே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News