தென்காசி மாவட்டத்தில் கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகள் செய்து தர வேண்டும் -அமைச்சரிடம், ராஜா எம்.எல்.ஏ. மனு
- தென்காசி மாவட்டத்தில் மேலகரம், குருக்கள்பட்டி, வாசுதேவநல்லூர், ஊத்துமலை, சிவகிரி, வன்னிக்கோனேந்தல் கிராமங்களில் இருந்து செயல்பட்டு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டு உள்ளது.
- இதனால் இரவு நேரங்க ளில் உயிருக்கும் போராடும் நோயாளிகளுக்கு தனியார் ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது.
சங்கரன்கோவில்,:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை, தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் மேலகரம், குருக்கள்பட்டி, வாசுதேவநல்லூர், ஊத்துமலை, சிவகிரி, வன்னிக்கோனேந்தல் கிராமங்களில் இருந்து செயல்பட்டு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் இரவு நேரங்க ளில் உயிருக்கும் போராடும் நோயாளிகளுக்கு தனியார் ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து மேற்கண்ட கிராமங்களில் இயங்கி வரும் 108 ஆம்பு லன்ஸ் வாகனம் 24 மணி நேரமும் இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த சந்திப்பின் போது வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன்திருமலைகுமார் உடன் இருந்தார்.