திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் - மாணவர்கள் கோரிக்கை
- திருச்செந்தூரில் இருந்து வரும் பஸ்கள் போதுமானதாக இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
- மாணவர்களின் நலன் கருதி காலை மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் இருந்து வள்ளியூர் வரை நாலுமூலைக்கிணறு, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், நங்கை மொழி, சாத்தான்குளம், இட்டமொழி மற்றும் இதற்கு இடைப்பட்ட பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் பள்ளி, பாலிடெக்னிக், கல்லூரிக்கு சென்று வருகின்றனர். காலை நேரத்தில் திருச்செந்தூரில் இருந்து வரும் பஸ்கள் போதுமானதாக இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம் வரை அதே போல் சாத்தான்குளத்தில் இருந்து திருச்செந்தூருக்கும் பிரத்தியேகமாக மாணவ- மாணவிகளுக்கென தனியாக மாணவர்களின் நலன் கருதி காலை மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறி வருகின்றனர். இதே போல் சாத்தான்குளத்தில் இருந்து வள்ளியூருக்கும், வள்ளியூரிலிருந்து சாத்தான்குளத்திற்கும் தனி பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.