உள்ளூர் செய்திகள்

பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது

ஆடி முதல் செவ்வாய் கோட்டை மாரியம்மன் கோவிலில் கூல் ஊற்றி நேர்த்திக்கடன்

Published On 2022-07-19 07:54 GMT   |   Update On 2022-07-19 07:54 GMT
  • ஆடி மாதத்தின் அனைத்து நாட்களிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
  • ஆடி முதல் செவ்வாயான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் ஏராளமானோர் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திண்டுக்கல்:

ஆடி மாதத்தின் அனைத்து நாட்களிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிமற்றும் செவ்வாய்கிழமைகளில் பக்தர்களுக்கு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தப்படும்.

கடந்த வருடம் கொரோனா ஊரடங்கால் கோவில்கள் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் வாசற்படியிலேயே சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

தற்போது வழிபாட்டு தலங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தினசரி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி முதல் செவ்வாயான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் ஏராளமானோர் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags:    

Similar News