அரியகுளம் ஊராட்சியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த, கொள்கை பிடிப்புள்ள கட்சி தொண்டர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும்.
- நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி அமைப்பதற்கான நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
நெல்லை:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை வடக்கு ஒன்றியம் அரியகுளம் ஊராட்சியில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாளை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மண்டல பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயண பெருமாள் கலந்து கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள் கூறும்போது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த, கொள்கை பிடிப்புள்ள கட்சி தொண்டர்களை, பூத் கமிட்டி நிர்வாகிகளாகவும், கிளை கமிட்டியில் நிர்வாகிகளாக நியமித்து, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் மலர ஒவ்வொரு தொண்டர்களும் முனைப்புடன் கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில் ஊராட்சிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி அமைப்பதற்கான நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
இதில் ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், மகளிர் அணியினர், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.