உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்த காட்சி

செங்கோட்டையில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம்

Published On 2023-01-08 08:05 GMT   |   Update On 2023-01-08 08:05 GMT
  • கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு இளங்கலை மாணவர்கள் 9 பேர் செங்கோட்டை வட்டாரத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக முகாமிட்டு விவசாயிகளோடு தங்களுடைய விவசாய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
  • நிகழ்ச்சிக்கு செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் தலைமைதாங்கினார்.

செங்கோட்டை:

செங்கோட்டையில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின் பேரில் தென்காசி வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சரவணன் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதலை செய்துள்ளார். செங்கோட்டை பகுதியில் விவசாயிகள் பிசான நெல் சாகுபடி செய்து வரும் நிலையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளிடம் வரிசை நடவில் நடப்பட்டுள்ள திருந்திய நெல் சாகுபடி திடல்களில் களை கட்டுப்பாட்டினை கோனோ வீடர் என்ற உருளும் களை கருவிக் கொண்டு எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை செயல் விளக்கம் செய்து காட்டினார்.

நிகழ்ச்சிக்கு செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் தலைமைதாங்கினார். இறுதி ஆண்டு இளங்கலை வேளாண்மை பட்டப் படிப்பு மாணவர்கள் ரகுநந்தன், சஞ்சீவி, வெயிலுமுத்து குமரன், துரைப்பாண்டி, வல்லரசு, மணிகண்டன், ராஜ் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு செயல் விளக்கத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News