உள்ளூர் செய்திகள்

வேளாண்துறை அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் அதிகாரி ஆய்வு

Published On 2022-11-15 08:13 GMT   |   Update On 2022-11-15 08:13 GMT
  • அம்மாலூர் கிராமத்தில் தண்ணீர் கிளைதாங்கி ஆறு வடிகாலில் வடியும்.
  • பயிர்கள் அழுகி விடும் சூழ்நிலை உள்ளது.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் எடையூர் வருவாய் கிராமத்தை சேர்ந்த அம்மலூர் கிராமம், வாடி காலனி கிளைதாங்கி ஆற்று கரையை ஒட்டி அமைந்துள்ளது.

இது சுற்றுப்பகுதி கிராமங்கள் விட மிகவும் பள்ளமான கிராமம். தற்போது பெய்த தொடர் மழையால் கிராமத்தில் சேர்ந்த 450 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் முழ்கி உள்ளது.

2 நாட்களின் நீர் வடிந்தால் சம்பா பயிர்களை காப்பாற்ற முடியும். மேடான சித்தாளந்தூர், கடுவெளி, வெள்ளங்கால் கிராமங்களில் தண்ணீர் வடிந்து பிறகு தான் அம்மாலூர் கிராமத்தின் தண்ணீர் கிளைதாங்கி ஆறு வடிகாலில் வடியும்.

அதற்குள் பயிர்கள் அழுகி விடும் சூழ்நிலை உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை அதிகாரி சாமிநாதன் ஆய்வு செய்தார்.

எனவே இதற்கு மாற்று ஏற்பாடாக மின்சார பம்பு செட்டு அமைத்து மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை வடிகால் ஆற்றில் இறைத்து இக்கிராம விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று முதல்வருக்கும், அதிகாரிகளுக்கும் அம்மலூர் கிராம கமிட்டி தலைவர் ராஜமாணிக்கம், பழம் பாண்டி ஆறு பாசன கமிட்டி தலைவர் மோகன், விவசாயிகள் பாண்டி, கேட்டடி துரைராஜ், பூமிநாதன், ஜெயராமன், கணேசன், இளங்கோவன், பாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News