தூத்துக்குடி மாநகராட்சியில் காற்று மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
- விழிப்புணர்வு பேரணிக்கு மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.
- பேரணியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தி சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து இன்று நடத்திய காற்று மாசுகட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணிக்கு மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். மாநகராட்சி மைய அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணியில் "மரம் நடுவோம் மழை வளம் பெறுவோம்", "புகை நமக்கு பகை" உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை மாணவ மாணவிகள் ஏந்தி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணி மீண்டும் மாகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
விழிப்புணர்வு பேரணியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், காந்திமதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர் சத்தியராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ஹரிபாலகணேஷ், ராஜசேகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், கருணா, மணி, அல்பட், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.