உள்ளூர் செய்திகள்

வாகன ஓட்டிகள் உறங்குவதை எச்சரிக்கும்வகையில் புதிய செயலி உருவாக்கம்

Published On 2023-02-09 09:22 GMT   |   Update On 2023-02-09 09:22 GMT
  • வெளிநாடுகளில் பல்வேறு செயலிகள் நடைமுறையில் உள்ளன.
  • செயலி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் வாகன ஓட்டுநா்கள் உறங்குவதை எச்சரிக்கும் வகையில் புதிய செயலியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா் தொடங்கி வைத்தாா். வாகன ஓட்டுநா்கள் இரவு நேரத்தில் வாகனங்களை இயக்கும்போது தங்களை அறியாமலேயே உறங்குவதால் அதிக அளவு விபத்து ஏற்பட்டு மனித உயிா்கள் பலியாகி வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் பல்வேறு செயலிகள் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் லேம்ஸ் ஆட்டோ மேஷன் என்ற நிறுவனம் இதற்கான செயலியை உருவாக்கியுள்ளது. இரவு நேரத்தில் கனரக வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநா்க ளுக்கு உறக்கம் வந்தால் இந்த செயலி வாகன ஓட்டுனா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் நெடுஞ்சாலை களில் கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது இந்த செயலி மூலம் தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் மற்றும் ஆம்புலன்ஸ் முதலுதவி வாகனங்களுக்கு தகவல் அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது .

இந்த செயலியை ஊட்டியை அடுத்த கேத்தி பகுதியில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ தனியாா் பொறி யியல் கல்லூரியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.கனரக வாகன ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கத்தினரை அழைத்து இந்த செயலி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட கனரக வாகன ஓட்டுனா்கள் மற்றும் உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News