உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி சமத்துவ விருந்து பரிமாறினர்.

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சையில் சமத்துவ விருந்து

Published On 2023-04-15 09:16 GMT   |   Update On 2023-04-15 09:16 GMT
  • தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
  • ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கியொலிக்கும் குரலாய் ஒலித்தவர் அண்ணல் அம்பேத்கர்.

தஞ்சாவூர்:

சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள் சமத்து நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி அனைத்து மக்களும் சமம் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நாஞ்சிக்கோட்டை சாலை மாதவராவ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை நகர தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தஞ்சை மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட பணியாளர்களுக்கு வடை பாயசத்துடன் அறுசுவை மதிய உணவு பரிமாறி அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சமத்துவ விருந்து அருந்தினர்.

அப்போது பேசிய துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சாதி, இனம், மொழி என்கிற வரையறைகளைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கியொலிக்கும் குரலாய் ஒலித்தவர் அண்ணல் அம்பேத்கர்.

அவரின் பிறந்தநாளை எந்த வகையிலான ஒடுக்கு முறை, அநீதி, பாரபட்சத்துக்கும் எதிராக நம்மை தயார்படுத்துவது தான் அம்பேத்கருக்கு நாம் செய்யும் மரியாதை என்றார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி தன்னார்வலர்கள் சுந்தரி, மாலதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News