உள்ளூர் செய்திகள் (District)

வறண்டு கிடக்கும் அணைப்பட்டி வைகை ஆறு.

15 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீரின்றி முற்றிலும் வறண்ட அணைப்பட்டி வைகை ஆறு

Published On 2023-08-28 05:51 GMT   |   Update On 2023-08-28 05:51 GMT
  • மழை இல்லாததால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
  • எப்போதும் இந்த அளவுக்கு கடுமையான வெயிலும் அதே சமயம் வைகையாறு படுகையும் இப்படி காய்ந்து கிடப்பதை பார்த்ததில்லை என்று விவசாயிகள், பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

நிலக்கோட்டை::

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது. பொதுவாக ஆடி , ஆவணி மாதங்களில் மழை பெய்து வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் இந்த ஆண்டு ஆடி, ஆவணி மாதத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மழை இல்லாததால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆவணி மாதத்தில் வைகை ஆறு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. எப்போதும் இந்த அளவுக்கு கடுமையான வெயிலும் அதே சமயம் வைகையாறு படுகையும் இப்படி காய்ந்து கிடப்பதை பார்த்ததில்லை என்று விவசாயிகள், பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இப்படியே மழை இல்லாமல் போனால் நிச்சயமாக நிலக்கோட்டை ஒன்றியத்தில் மிகுந்த அளவில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும். நிலக்கோட்டை ஒன்றியம் மட்டும் அல்லாமல் அதனை சுற்றியுள்ள சின்னாளப்பட்டி, செம்பட்டி ஆகிய பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளையும், அணைப்பட்டி வைகை ஆற்றுப் படுகையில் போடப்பட்டுள்ள வட்டக் கிணறுகளையும் பராமரிக்க முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News