உள்ளூர் செய்திகள்

கடம் புறப்பாடு நடந்தது.

ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-06-17 10:03 GMT   |   Update On 2022-06-17 10:03 GMT
  • யாகசாலையில் புனித நீர் கொண்டு வரப்பட்டு விநாயகர் வழிபாடு உடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
  • கும்பாபிஷேகத்திற்கு பின்னர் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பூதலூர்:

பூதலூர் அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த கெங்கை சமுத்திரம் பகுதியில் ஆனந்த விநாயகர் கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம்இன்று நடைபெற்றது. இக்கோவி லில் ஸ்ரீ ஆனந்த விநாயகர், ஸ்ரீ பாலசுப்பிரமணியர், ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி ஆலயத்தின்முன்புறம் யாகசாலை அமைக்கப்பட்டு இருந்தது. யாகசாலையில் புனித நீர் கொண்டு வரப்பட்டு விநாயகர் வழிபாடு உடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. முதல் கால யாகசாலை பூஜைக்கு பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜை இன்று காலை தொடங்கியது. இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றவுடன் புனிதநீர் அடங்கிய கடம் நாதஸ்வர இசை முழங்க புறப்பட்டது.

புனிதநீர் அடங்கிய கடம் கோவில் வலம் வந்த பின்னர் கோவிலின் மூலஸ்தான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பாலசு ப்பிரமணியர் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆகிய அமைந்துள்ளசன்னதி களுக்கு கும்பாபிஷேகம் நடை பெற்றது.கும்பாபி ஷேகத்திற்கு பின்னர் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேகவிழா ஏற்பா டுகளை கெங்கசமுத்திரம் கிராம பொதுமக்கள் செய்தி ருந்தனர்.

Tags:    

Similar News