உள்ளூர் செய்திகள்

சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டிருந்த காட்சி.

ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு செப்பரை கோவிலில் அன்னாபிஷேகம்

Published On 2022-11-08 09:07 GMT   |   Update On 2022-11-08 09:07 GMT
  • செப்பரை அழகிய கூத்தர் கோவிலில் நேற்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
  • மூலவருக்கு16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

நெல்லை:

பாளை ராஜவள்ளிபுரம் செப்பரை அழகிய கூத்தர் கோவிலில் நேற்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இதற்காக மூலவருக்கு மாபொடி, மஞ்சள், திரவியம், பால், தயிா், தேன், பஞ்சாமிருதம், இளநீா், பன்னீா், வீபூதி மற்றும் சந்தனம் போன்ற 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடா்ந்து அன்னாபிஷேகம் நடைபெற்று காய்கனி, அன்ன அலங்காரத்துடன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நிறைவாக நட்சத்திர ஆரத்தி, கும்பஆரத்தி மற்றும் பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

பின்னா் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை கொடை பிடிக்க மேளதாளங்களுடன் தாமிரபரணி நதிக்கரைக்கு எடுத்துச் சென்றனா். அங்கு நதிக்கு அா்ச்சனை அபிஷேகங்கள் செய்து கொண்டுவந்த அன்னத்தை நீாில் சமா்பித்தனா். மீண்டும் கோவிலுக்கு வந்து அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அழகிய கூத்தருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News