போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம் தொடக்கம்
- போதை பொருளால் ஏற்படும் உடல்நலம், மனநலம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அடுத்த கொறுக்கை அரசு பல் தொழில் நுட்ப கல்லூரியில் நேற்று போதை பொருளுக்கு எதிரான இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடங்ப்பட்டு மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழாவில் கல்லூரி எந்திரவியல் துறை தலைவர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் காசி தலைமை தாங்கினார்.
போதை பொருளுக்கு எதிரான இயக்கத்தை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தொடங்கி வைத்து, போதை பொருளால் ஏற்படும் உடல்நலம், மனநலம், சமூக, பொருளாதார இழப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை இல்லம் தேடி கல்வி திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து ராமதேவர் சித்தர் அறக்கட்டளை மாநில தலைவர் ரவிச்சந்திரன் உரையாற்றினார்.
விழாவில் முதலாம் ஆண்டு விரிவுரையா ளர்களும், கட்டிட பொறியியல் துறை விரிவுரையாளர்களும், 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.