உள்ளூர் செய்திகள்

இ-சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

Published On 2023-03-29 09:45 GMT   |   Update On 2023-03-29 09:45 GMT
  • இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். tnesevai.tn.gov.in, tnega.tn.gov.இந்த

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். tnesevai.tn.gov.in, tnega.tn.gov.in இணையதள முகவரிகளை பயன்படுத்தலாம்.

ஏப்ரல் 14-ந் தேதி இரவு 8 மணி வரை மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பம் கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர புறத்துக்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆகும்.

விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரருக்கு உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவை விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News